இலங்கைசெய்திகள்

இஸ்ரேல் – லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

12 28
Share

இஸ்ரேல் – லெபனான் மோதல்: இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லையென தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் சீ. சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவரம் நடவடிக்கை எடுப்போம்.

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக இஸ்ரேல், லெபனான் நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக அங்கு தொழிலுக்கு சென்றிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் தொடர்ந்து எமது தூதரங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இலங்கையர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்ற எமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதேநேரம் அவர்களில் யாருக்கும் இதுவரை நாட்டுக்கு திரும்பவேண்டி தேவையும் ஏற்படவில்லை. அவ்வாறு தேவை ஏற்பட்டால், அவர்களை நாட்டுக்கு அழைத்து வரவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இதேவேளை, லெபனானில் 7ஆயிரம் இலங்கையர்கள் உள்ள நிலையில், இந்த வருடம் ஒக்டோபர் 29ஆம் திகதிவரை 1116 பேர் லெபனானுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளனர்.

மேலும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையர்களை லெபனானுக்கு அனுப்பும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் இஸ்ரேலிலும் யுத்தம் இடம்பெறும் நிலையில், நாடு வழமைபோன்று செயற்படுவதனால் இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

இதேவேளை, வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் கடந்த காலங்களில் அறிமுகப்படடுத்தப்பட்டிருந்தன. தொழில் அமைச்சுடன் இணைந்தே இது செயற்பட்டு வந்தது.

இதன்போது அவர்கள் நாட்டுக்கு வரும்போது அவர்களுக்கு வாகன அனுமதி பத்திரம், காப்புறுதி திட்டம் என பல திட்டங்கள் செயற்படடுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக வாகனம் இறக்குமதி செய்வது தடைசெய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் அவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கபட்படிருந்தன. அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்ற நடவடிக்கை தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...