இலங்கை
சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் – ஓய்ந்து போகும் அநுர அலை
சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் – ஓய்ந்து போகும் அநுர அலை
இலங்கையில் அநுர அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதத்தையும் கடந்து விட்ட நிலையில், மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது.
நாட்டில் சடுதியாக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. பணவீக்கம் குறைவடைந்துள்ளது என பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் மக்கள் வாழ்க்கை செலவு மட்டும் எந்தவித மாற்றமும் இன்றி அதிகரிப்பிலேயே உள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ரணில் அரசாங்கத்தின் இறுதிக்காலப்பகுதி சுமூகமான நிலையில் இருந்த போதும், தற்போது அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பலர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இந்த மாதத்தில் பொருட்களின் விலைகளில் கணிசமான அதிகரிப்பை உணர்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதத்தில் பொருட்களுக்கான 10 ஆயிரம் ரூபா செலவிட்ட நிலையில், அதே பொருட்களுக்கு தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகை செலவிடுவதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்சியை பொறுப்பேற்றதுடன் பல்வேறு மாற்றங்களை செய்யப் போவதாக தேர்தல் மேடைகளில் சூளுரைத்த சமகால ஜனாதிபதி, தனது ஆட்சியை பலப்படுத்தும் நோக்கிலேயே செயற்படுவதாகவும், மக்கள் நலன்சார்ந்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையும் பலர் குறைப்பட்டுள்ளனர்.
கடந்த ரணில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சாதகமான நிலைப்பாட்டினை சமகால அரசாங்கம் அனுபவித்து வருவதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.