29 5
இலங்கைசெய்திகள்

கடவுச்சொல்லை பாதுகாக்க தவறும் இலங்கையர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

கடவுச்சொல்லை பாதுகாக்க தவறும் இலங்கையர்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சுமார் 50 வீதமானவர்கள் தமது ‘ஒரு முறை கடவுச்சொல்லை (OTP)’ பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 60 சதவீத மக்கள் ஒரு முறை கடவுச்சொல்லின் (OTP) நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜும்ஜிம் மொஹொட்டி, தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேலும், இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பயனர்களில் ஏறத்தாழ 68 சதவீதம் பேர், மோசடி செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளுக்குள் உள்நுழைய பயன்படுத்தும் முறைகள் பற்றி அறிந்திருக்கவில்லை.

இணைய பரிவர்த்தனைகளில் முதன்மையான விதி என்னவென்றால், OTPயை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.  இணைய பரிவர்த்தனைகளில் கைப்பேசிகளுக்கு OTP வந்தால், அது உங்கள் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க பயன்படுத்தும் முறைமை.

நீங்கள் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யாதபோது OTPயைப் பெற்றால், இணையக் குற்றவாளிகள் தங்களது கணக்கிற்குள் நுழைந்துள்ளதாக அர்த்தம்.

சமூக ஊடகங்கள் தற்போது பல இணையக் குற்றவாளிகள் தங்களது மோசமான இலக்குகளை அடையப் பயன்படுத்தும் பொதுவான ஆயுதமாக மாறியுள்ளது.

இரகசிய அல்லது தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் மக்களை ஏமாற்ற உளவியல் தந்திரங்களைப் இவர்கள் பயன்படுத்துகின்றனர்.

அரசாங்க நிறுவனம் போல் அடையாளம் காட்டிக்கொண்டு பலமுறை உங்களை அழைத்து மோசடியில் ஈடுபடுவார்கள்.

எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் விளிப்புடன் செயற்பட்டு தங்களது வங்கி கணக்குகளை பாதுகாத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...