16 5
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து நடத்துனரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய உரிமையாளர்

Share

தனியார் பேருந்து நடத்துனரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய உரிமையாளர்

தனியர் பேருந்து ஒன்றில் நடத்துனராக கடமையாற்றி வந்த இளைஞர் ஒருவர் பணத்தை திருடியதாக கூறி உரிமையாளரால் தாக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் குறித்த சம்பவம் நேற்று(07.10.2024) இடம்பெற்றுள்ளது

இது தொடர்பில், தெரியவருவதாவது களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையானரின் பேருந்தானது கல்முனை – மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவருகிறது.

குறித்த பேருந்தின் நடத்துனராக அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞன் ஒருவர் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பேருந்தில் இருந்து பணத்தை திருடியதாக கூறி நடத்துனர் மீது அதன் உரிமையாளர் குற்றச்சாட்டு தெரிவித்து கடமையில் இருந்த அவரை சம்பவதினமான நேற்று பகல் ஒந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணி ஒன்றிற்குள் இழுத்துச் சென்று அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனை கண்ட பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகைத்தந்த நிலையில் கட்டிவைத்து அடித்தவரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
நகைகளை வைத்து சூதாடிய குருக்கள்
இலங்கை

ஆலய நகைகளை திருடி சூதாடிய குருக்கள்!

கொழும்பு – கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய...

Court order 3
இலங்கை

புலிகளின் முகாம் தொடர்பில் வதந்தி – சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலித் தகவலை வௌியிட்ட...

Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....