31 6
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு அறிவித்தல் அனுப்பிய டெல்லி மேல் நீதிமன்றம்

Share

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு அறிவித்தல் அனுப்பிய டெல்லி மேல் நீதிமன்றம்

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் பணியாளர் ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு டெல்லி மேல் நீதிமன்றம் அறிவித்தலை அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி அஜய் வர்மாவின் தகவல்படி, நிறுவனப் பணியாளர் ஒருவரை துன்புறுத்தியது தொடர்பாக தொழில்துறை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதே இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தரவை பிறப்பித்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்டவருக்கு ஊதியம் மற்றும் அதன் விளைவான சலுகைகள் எதையும் வழங்கவில்லை.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் சட்டத்தரணி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் டெல்லி மேல் நீதிமன்றம், விமான நிறுவனம் தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதியன்று விசாரணைக்கு வருகிறது.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...