2 3
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிக்க இணைவு பேச்சுவார்த்தையில் ரணில்- சஜித்

Share

தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிக்க இணைவு பேச்சுவார்த்தையில் ரணில்- சஜித்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் முகாம்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோரின் இரண்டாம் நிலை முகாம்களுக்கு இடையில் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றிகளை மாற்றியமைக்க ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இந்த விவாதங்களில் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முறியடிக்கும் இந்த இரண்டு தரப்பினதும் முயற்சிகள் இப்போது கால தாமதமாகிவிட்டதாக அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...