18 24
இலங்கைசெய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு!

Share

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு!

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் குழு மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவும் நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

குறித்த குழுக்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்​கைகளை முன்னெடுப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகளும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...