1 25
இலங்கை

ரணிலுக்கு கிடைத்த முக்கிய தமிழர் தரப்பின் ஆதரவு

Share

ரணிலுக்கு கிடைத்த முக்கிய தமிழர் தரப்பின் ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பான அறிவிப்புதேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ் மக்கள் கூட்டணியினுடைய தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

எனினும் ரணிலை நாம் நிராகரித்தோம் என ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவை தெரிவித்துள்ளன.

குறித்த கட்சிகள் மேலும் தெரிவித்தாவது,

“ரணிலுக்கு தமிழ் மக்கள் கூட்டணியினுடைய தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்துள்ளதன் அடிப்படையில் பொது ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு நீங்களும் இணங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் எம்மிடம் கோரிக்கை விடுத்தார்.

நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஒரு தனிக்கட்சி. அவர் யாரை ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை அவர் தெரிவிப்பது அவருடைய சுதந்திரம். நாம் அப்படியான முடிவுகள் எதையும் இதுவரைக்கும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் சந்தித்தது எமது மக்களின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிப்பதற்கும் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கு அவருடைய அர்ப்பணிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்குமாகவே.

மாறாக அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருக்கு நாம் தெளிவாக தெரிவித்தோம்.” என தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...