7 18
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற பெரும்பான்மையை குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளின் அடிப்படையில் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என கருத்துக்கள் உலாவுகின்ற நிலையில், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பெரும்பான்மை குறித்த குழப்பங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.

அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் இறுதியாக இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் பின்னர் பொதுஜன பெரமுனவின் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாளிக்க உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதேவேளை ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் நாடாளுமன்ற உறுப்புரிமை இன்மையால், ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் குறித்த அறிவிப்பின் பிரகாரம் ஆரம்பத்தில் 134 என்ற பெரும்பான்மையை கொண்டிருந்த ஆளும் கட்சிக்கு தற்போது 113 என்ற பெரும்பான்மை கூட இல்லை என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை யார் வசம் உள்ளது என்பதில் குழப்ப நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய நெருக்கடியில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? என்ற கேள்விக்கு அரசாங்கம் அதனை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...