tamilni 70 scaled
இலங்கை

விபத்தில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே பலியான பெண் : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

Share

விபத்தில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே பலியான பெண் : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கைது

கொழும்பில் (Colombo) இருந்து வவுனியா (Vavuniya) நோக்கி பயணித்த சொகுசு பேருந்துடன் மோதி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு மருத்துவ அறிக்கைக்காக நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் சந்தேக நபரான சாரதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்தானது நொச்சியாகம பகுதியில் நேற்று (30) இடம்பெற்றுள்ள நிலையில், இந்த விபத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் மற்றும் மனைவியே முகங்கொடுத்துள்ளனர்.

அத்தோடு, ராஜாங்கனை யாய 15 இல் வசிக்கும் 34 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் குறித்த பெண் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் நொச்சியாகம நகரை நோக்கி பயணித்த போது இந்த விபத்திற்குள்ளானதாகவும் மற்றும் விபத்தில் கணவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தை அதிவேகமாக செலுத்தியதாலும் மற்றும் பேருந்து சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாலும் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம போக்குவரத்து காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாரதியை நொச்சியாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...