24 66a4612a03b7b
இலங்கைசெய்திகள்

விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு: விடை பெறும் தமிழ் மக்களுக்காக ஒலித்த குரல்

Share

விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு: விடை பெறும் தமிழ் மக்களுக்காக ஒலித்த குரல்

நவ சம சமாஜ கட்சியின் மறைந்த தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் (Wickramabahu Karunaratne) இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது.

பொரளை (Borella)– பொதுமயானத்தில் இன்று (27.7.2024) பிற்பகல் 5 மணிக்கு இறுதிக் கிரியை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன கடந்த புதன் கிழமை காலமானார்.

மறைந்த விக்ரமபாகு கருணாரத்ன தமிழர் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கொள்கையை கடைப்பிடித்து அது தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்துவந்தவர்களில் ஒருவர் ஆவார்.

அத்துடன் இன பிரச்சினையை தீர்க்கும் எண்ணம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசியப் பிரச்சினை தொடர்பான தீர்வில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறிவந்திருந்திருந்தார்.

மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான நம்பிக்கை, இராணுவ கையிருப்பில் உள்ள நிலங்களை மக்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களை தனது அதிகாரத்தை கொண்டு தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...