இலங்கை
கோட்டாபயவின் மற்றுமொரு தோல்வி: வீணடிக்கப்பட்ட பல மில்லியன் ரூபாய்கள்
கோட்டாபயவின் மற்றுமொரு தோல்வி: வீணடிக்கப்பட்ட பல மில்லியன் ரூபாய்கள்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் நடவடிக்கை காரணமாக, 84 மில்லியன் ரூபாய்கள் வீணடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி வரையில், அரசியல் பாதிப்புக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான விசாரணை ஆணைக்குழுவுக்காக, 84 மில்லியன் அரச நிதி செலவிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான மூவரடங்கிய ஆணையகம், 2020ஆம் ஆண்டு ஜனவரியில், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 2020ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆணையத்தின் நடவடிக்கைகளுக்காக 84 மில்லியன் அரச நிதி செலவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுக்களை அடுத்து சர்ச்சைக்குரிய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன.