24 667944cf387a7
இலங்கைசெய்திகள்

விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவருக்கு சீன பிரஜைகள் இருவரால் நேர்ந்த கதி

Share

விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவருக்கு சீன பிரஜைகள் இருவரால் நேர்ந்த கதி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (United Arab Emirates) இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில் இலங்கையர் ஒருவரின் பயணப் பொதியிலிருந்து தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக கூறப்படும் சீன (China) பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சீன பிரஜைகள், இலங்கையரிடம் இருந்து இரண்டு வைர மோதிரங்கள், தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், தங்கப் பதக்கம் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த இலங்கையர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) அபுதாபியில் இருந்து இலங்கைக்கு சீன பிரஜைகளுடன் பயணித்ததாகவும், தனது பையை ஆசன எண் 09இற்கு மேலே உள்ள விமான மேல்நிலை கேரியரில் வைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தரையிறங்கும் நேரத்தில் தனது பொருட்கள் காணாமல் போனது அறிந்து, இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், அந்த விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் சோதனை செய்யப்பட்டனர்.

இதற்கமைய, சோதனையின் போது, ​​31 மற்றும் 36 வயதுடைய சீன பிரஜைகள் இருவரிடமும் திருடப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்தே குறித்த இருவரும் விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...