tamilni Recovered 9 scaled
இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனுர ஆட்சியில் நீதி : பிமல் ரத்நாயக்க பகிரங்கம்

Share

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனுர ஆட்சியில் நீதி : பிமல் ரத்நாயக்க பகிரங்கம்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி (JVP) அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) வெளியிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் தெற்கில் வாழும் மக்களுக்கும், வடக்கு – கிழக்கு மலையக வாழ் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இன, மத, சாதி, நிற பேதமின்றி அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடியும்.

வடக்கில் போரினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், காணாமல் போனவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது, ஆனால் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. எனவே எங்கள் அரசாங்கத்தின் கீழ் நீதி நிலைநாட்டப்படும்.

யுத்த காலத்தின் பின்னர் வடக்கு மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவம் விட்டுச் சென்ற போதிலும் அவர்களுக்கு அந்த காணிகள் உரியதாக இல்லை, அவர்களுக்கு நியாயமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும், அதனை பாதுகாக்கும் நாடு என்பதை உணர வேண்டும்.“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...