24 66758e508e05e
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இருந்து வெளியேறப்போகும் பெரும் எண்ணிக்கையான மருத்துவர்கள்: எச்சரிக்கும் மருத்துவர் சங்கம்

Share

இலங்கையில் இருந்து வெளியேறப்போகும் பெரும் எண்ணிக்கையான மருத்துவர்கள்: எச்சரிக்கும் மருத்துவர் சங்கம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறப்போவது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது

நாட்டில் உள்ள மருத்துவர்களில், 25 சதவீதம் பேர் ஏற்கனவே வெளிநாட்டில் வேலை தேடுவதற்கான முனைப்புக்களை மேற்கொண்டுள்ளனர் என்று அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், சராசரியாக 200 மருத்துவர்கள் வேறொரு நாட்டில் பணிபுரிய இடம்பெயர்ந்தனர் என்று சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 1,800 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது அரசாங்க சுகாதார அமைப்பில் பணியாற்றும் குறைந்தது 25 சதவீதமான வைத்தியர்கள் வெளிநாடுகளில் வேலை தேடுவதற்கு தேவையான பரீட்சைகளில் ஏற்கனவே சித்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எண்ணிக்கையை பொறுத்தவரையில் இலங்கையின் சுகாதாரத்துறையில் தற்போது 20ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.

இவர்களில் ஏறக்குறைய 5,000 இலங்கை மருத்துவர்கள் இந்தப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளதாகவும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முடிவை எடுக்கக் காத்திருப்பதாகவும்” விஜேசிங்க கூறியுள்ளார்.

வெளியேறுபவர்களில் அதிக எண்ணிக்கையிலான நிபுணர்கள், முக்கியமாக அவசரகால மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டாயப் பயிற்சிக்காகச் சென்றவர்களும் நாட்டுக்கு திரும்பி வர விரும்பவில்லை.

இலங்கையுடன் ஒப்பிடுகையில் அந்த நாடுகளில் அவர்களுக்கு வழங்கப்படும் அதிக சம்பளமே இதற்கு பிரதான காரணமாகும்.

மத்திய கிழக்கு நாடுகளை எடுத்துக்கொண்டால், அங்கு மருத்துவர்கள், இலங்கையில் பெறும் சம்பளத்தை காட்டிலும் கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாக சம்பளத்தை பெறுகின்றனர்.

ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியாவில், இந்த சம்பளம், சுமார் 20 முதல் 30 மடங்கு அதிகமாகும் என்றும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...