24 6664fc6d2a63d
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்: பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Share

மக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம்: பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

ரஷ்யாவிற்கு(Russia) சட்டவிரோதமாக நாடு கடத்தப்படும் வீரர்கள் தொடர்பில் தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சு தொலைபேசி இலக்கமொன்றை அறிவித்துள்ளது.

இது தொடர்பான எந்தவொரு தகவலையும் 011 2 44 11 46 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன்(Ukraine) போருக்காக ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர்களை கடத்தியமை தொடர்பில் இதுவரை 486 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ரஷ்யா – உக்ரைன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை(Sri lanka) இராணுவ வீரர்களை கடத்துவது குறித்து ஆலோசிக்க இலங்கை தூதுக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மாதம் 25ஆம் திகதி குறித்த குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினரின் கடத்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதிகாரிகள் குழு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை இராணுவ வீரர்ககள் இந்த குழுவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாதுகாப்பு செயலாளர் நாயகம் (ஓய்வு) கமல் குணரத்ன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...