24 664400708974b
இலங்கைசெய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்

Share

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியின் மகள் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலனின் மகள், இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும் சசிதரன், மாவிலாறு அணையை மூடி இறுதிக் கட்டப் போருக்கு வழி வகுத்தவர் என்று இராணுவ வட்டாரங்களில் குறிப்பிடப்படுகின்றார்.

இறுதிக் கட்டப் போரின் போது அவர் இராணுவத்திடம் சரணடைந்ததாக எழிலன் மனைவி அனந்தி சசிதரன் தெரிவித்திருந்த போதும், இராணுவம் அதனை மறுத்திருந்தது.

எனினும் எழிலன் தொடர்பில் அதன் பின்னர் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.

மேலும், காலங்களில் எழிலன் மனைவி அனந்தி, வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது எழிலனின் மகள் நல்விழி LLB(Hons) in Law பட்டம் பெற்றுக் கொண்டுள்ளதுடன், உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணமும் செய்துகொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...