இலங்கை
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள்
ரஷ்ய – உக்ரைன் (Russia – Ukraine) போரில் போரிடுவதற்காக 500இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் மூலம் ரஷ்யாவுக்கு கடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தித்தாள் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ரஷ்ய – உக்ரைன் மோதலில் இணைவதற்காக 600இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளார்கள் என தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
இது தொடர்பில் ரஷ்யா மற்றும் இலங்கை அரசாங்ககளுக்கிடையில் எந்த விதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவர்களுக்கு போலியான சம்பள வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் தற்போது மிகப்பெரிய கடன் சுமையில் இருப்பதாக ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அவர்களில் 15 பேர், போரில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அவர்களை மீட்டு நாட்டுக்கு கொண்டு வருவதற்கான மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.