24 663b10fa81648
இலங்கைசெய்திகள்

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு மனித கடத்தல் : இலங்கை கடற்படை அறிவித்தல்

Share

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு மனித கடத்தல் : இலங்கை கடற்படை அறிவித்தல்

இலங்கையின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவத்தினரை ரஷ்யா (Russia) மற்றும் உக்ரைனுக்கு (Ukraine) அனுப்பும் மனித கடத்தல் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையின் ய்வுபெற்ற இராணுவத்தினர் உக்ரேனியப் படைகளுடன் இணைக்கப்பட்டு, குடியுரிமை உள்ளிட்ட பெரும் சலுகைகளைப் பெற்றுத் தருவதாக கூறி சுற்றுலா வீசா மூலம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ரஷ்யா-உக்ரைன் போரில் முன்னணி சண்டைகளுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாரு ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சுற்றுலா வீசா மூலம் கொண்டு செல்லப்படும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், ரஷ்யா மற்றும் உக்ரைனில் செயல்படும் கூலிப்படைகளுக்கு நியமிக்கப்படுகின்றனர்.

மேலும், அவர்களுக்கு அதிக சம்பளம் அல்லது சலுகைகள் வழங்கப்படுவதில்லை எனவும் கடுமையான குளிர், குறைந்த வசதிகள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத கடுமையான நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்வதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

மற்றும் அவர்களில் சிலர் போர் வலயத்தில் பலத்த காயம் அடைந்து அங்கு எந்தவித ஆதரவின்றி இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தாய்நாட்டுக்குப் பல ஆண்டுகளாகப் பெருமை சேர்த்து பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரராகச் சம்பாதித்த அனைத்துச் சலுகைகளையும், சொத்துக்களையும் இந்த மனித கடத்தலில் சிக்கி இழக்காமல், வெளிநாட்டு நிலத்தில் தங்கள் உயிரை இழக்கும் அபாயத்தை தவிர்க்க அனைத்து ஓய்வுபெற்ற கடற்படை வீரர்களுக்கும் கடற்படை வலியுறுத்துகிறது.

மேலும், இந்த மனித கடத்தலில் ஈடுபடுகின்ற நபர்கள், செயலில் உள்ள இராணுவத்தினர் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் ஏனையவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் கடற்படை தலைமையக தொலைபேசி இலக்கமான 0117192142 அல்லது 0117192250 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...