24 662a116c432fc
இலங்கைசெய்திகள்

அரசியல் கூட்டணியின் புதிய நகர்வு: ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைக்கும் ரணில்

Share

அரசியல் கூட்டணியின் புதிய நகர்வு: ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைக்கும் ரணில்

பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ச மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை, அண்மையில் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அரசியல் பணிகளை எதிர்வரும் மே தினத்துக்கு பின்னர்,, தீவிரப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொண்டார்.

மேலும், அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, திரான் அலஸ், ஹரின் பெர்னாண்டோ, காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.

இதன்படி ஜனாதிபதியின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியாக மே தினப் பேரணிகளை நடத்துவதற்கும் அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலைக் கருத்திற்கொண்டு ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணிக்கு இணைவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இம்முறை பொது வேட்பாளராக, உத்தேச கூட்டணி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவார். இந்தநிலையில், அனைத்து கட்சிகளும் குழுக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சின்னத்தில் புதிய கூட்டணியை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணையை நாடு பெற்ற பிறகு, தேர்தலை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும மற்றும் பிவித்துரு ஹெல உறுமய தலைமையிலான அரசியல் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...