24 662897b0ac33a
இலங்கைசெய்திகள்

நாட்டை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி

Share

நாட்டை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) சற்று முன்னர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை பிரதமர் தினேஷ் குணவர்த்தன(Dinesh Gunawardena), வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry), கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) ஆகியோர் மத்தளை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) விசேட அழைப்பின் பேரில், ஈரான் ஜனாதிபதி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதுடன், 2008 ஏப்ரல் மாத்தில் அப்போதைய ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹமதிநெஜாட்டின் இலங்கை விஜயத்திற்குப் பின்னர், ஈரான் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

மகாவலி திட்டத்தின் பின்னர், நாட்டின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இணையும் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகளின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...