24 661e21e6c31b2
இலங்கைசெய்திகள்

யாழில் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு உயிரை மாய்த்த இளைஞன்!

Share

யாழில் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு உயிரை மாய்த்த இளைஞன்!

யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி விட்டு சந்தேகநபர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

இதன்போது இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வசித்து வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் யுவதியின் வீட்டிற்குள் நுழைந்து குறித்த யுவதி மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று வெற்றுக் காணி ஒன்றில் உயிர்மாய்த்துள்ளளார்.

இந்நிலையில், யுவதியும் யுவதியின் தாயாரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...