24 661145d9199fe
இலங்கைசெய்திகள்

தலாய் லாமாவின் இலங்கை விஜயத்தை எதிர்க்கும் சீனா

Share

தலாய் லாமாவின் இலங்கை விஜயத்தை எதிர்க்கும் சீனா

திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் (Dalai Lama) இலங்கை நாட்டிற்கான விஜயத்தை சீனா (China) தடுத்து வருவதாக இலங்கையின் உயர்மட்ட பௌத்த தலைவர் வஸ்கடுவே மஹிந்தவங்ச (Vaskatuve Mahindawangsa) தெரிவித்துள்ளார்.

புத்தரின் கபிலவஸ்து நினைவுச்சின்னங்களின் ஒரு பகுதியை தலாய் லாமாவிடம் ஒப்படைப்பதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில், இந்திய ஊடகம் ஒன்றின் பிரத்தியேக நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாங்கள் தலாய் லாமாவை மதிக்கிறோம், அவரை இலங்கைக்கு அழைத்தோம், ஆனால் சீனா அதை விரும்பவில்லை. எங்கள் அரசுக்கு எதிராக சீனா அழுத்தம் கொடுத்தது, எங்களுக்கு அது பிடிக்கவில்லை.

அவர் ஒரு பௌத்த தலைவர், அவருக்கு சுதந்திரம் உள்ளது. அழைப்பு விடுக்கும் சுதந்திரம் எமக்கு உள்ளது.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...