24 660e304f6d824
இலங்கைசெய்திகள்

பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கு அதிக கொடுப்பனவு!

Share

பரீட்சை கடமைகளில் ஈடுபடுவோருக்கு அதிக கொடுப்பனவு!

பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil premajayantha) தெரிவித்துள்ளார்.

நேற்று (03) மாலை அலரிமாளிகையில் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும்.

இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு, கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான அறிக்கை கோரப்படும்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களின் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுச் செயற்பாட்டிற்கு குறைந்தது 19,000 பரீட்சார்த்திகளும், 2024 க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கு குறைந்தது 25,000 பரீட்சார்த்திகளும் தேவை.” என்றார்.

இதனடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் மே மாதமளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...