இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு

24 660bb412658b6
Share

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு

வாகன இறக்குமதி செய்வது தொடர்பாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவால் (Harin Fernando) முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ யோசனையொன்றை முன்வைத்திருந்தார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனினும் அந்த வாகனங்களின் இறக்குமதிக்கு சிறப்பு வரிச் சலுகைகள் எதுவும் இல்லை.

அதன்படி, 6 – 15 இருக்கைகள் கொண்ட 750 வான்கள் (மின்சார மற்றும் கலப்பின உட்பட), குறிப்பாக சுற்றுலா பயணிகளின் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் 16 – 30 இருக்கைகள் கொண்ட சிறிய பேருந்துகள் மற்றும் 30 – 45 இருக்கைகள் கொண்ட 250 பேருந்துகள் என்பவற்றை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...