24 660b7fdfd6851
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(01) இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,”உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் அரசியல் தேவைக்காகவே நடத்தப்பட்டது என்பதற்கு பல விடயங்களை குறிப்பிடலாம்.

தற்கொலை குண்டுதாரியான ஜமீலின் வீட்டுக்கு சி.ஐ.டி.யினர் சென்றமை, மாத்தறை பொடி சஹ்ரான்,சொனிக் என்ற சொல், அபூபக்கர், குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்டமை.

அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் தகவல் கிடைத்ததாக பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளமை உள்ளிட்ட பல காரணிகள் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்தால் 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் .500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். பலர் இன்றும் படுக்கையில் விசேட தேவையுடையவர்களாக உள்ளார்கள்.

இவர்களின் நிலையை கண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு மனவேதனை என்பதொன்று இல்லையா?

இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மைத்திரிபால சிறிசேன சிறுபிள்ளை போல் பேசுகிறார்.

உண்மையை மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த அவருக்கு தற்றுணிவு கிடையாது.

அரசியல் நோக்கத்துக்காகவே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது பிரதான சூத்திரதாரியும் அரசியல் நோக்கத்துக்காவே பாதுகாக்கப்படுகிறார்.”என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...