24 664ae1d8aa9af
இலங்கைசெய்திகள்

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு

Share

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் புத்தூர் – கனகம்புளியடி வீதியில் இராணுவ வாகனம் மோதியதில் பிறந்தநாளில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி கனகம்புளியடி – வீரவாணி சந்தியில் இன்று (20) காலை துவிச்சக்கர வண்டியில் பால் கொண்டு சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்படவே செல்லும் வழியிலேயே யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக இராணுவத்தினரிடம் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...