24 6608c1e188745
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும வேலைத்திட்டத்தினால் முடக்கப்பட்டுள்ள சமுர்த்தி

Share

அஸ்வெசும வேலைத்திட்டத்தினால் முடக்கப்பட்டுள்ள சமுர்த்தி

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அஸ்வெசும வேலைத்திட்டத்தினால் முழு சமுர்த்தி திட்டமும் முடக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார (Jagat Kumara) தெரிவித்துள்ளார்.

இதன்படி, சமுர்த்தி திட்டத்தின் கீழ் இயங்கி வந்த சமூக பாதுகாப்பு நிதி, வீடமைப்பு கடன், கட்டாய சேமிப்பு நிதி என்பன தற்போது முற்றாக முடக்கப்பட்டுள்ளதாகவும், சமுர்த்தி பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நன்மைகளும் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

16 இலட்சம் சமுர்த்தி பயனாளிகளில் 08 இலட்சம் பேரே அஸ்வெசும திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் எவரும் சமுர்த்தி சமூக பாதுகாப்பு திட்டத்துடன் இணைக்கப்படாததால் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பணம் வரவு வைக்கப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு கடன் மூலம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன் நாற்பத்து மூவாயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் நிதியும் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஏறக்குறைய இருபது வருடங்களாக சமுர்த்தி திட்டத்தில் அங்கம் வகிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் நிவாரணத் திட்டத்தினால் இந்த நன்மைகள் அனைத்தையும் இழந்துள்ளமை பாரதூரமானது எனவும், ஜனாதிபதியிடம் சந்தர்ப்பம் கோரியுள்ளதாகவும் ஜகத் குமார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...