24 660661f43349b
இலங்கைசெய்திகள்

வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

Share

வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

கரையோரப் பாதையில் தொடருந்துகளை இன்று (29.3.2024) முதல் 31 ஆம் திகதி வரை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையே இயங்கும் தொடருந்துகள் ஒரு வழிப் போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கு இடையில் குழாய் ஒன்றின் பராமரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் தொடருந்து சேவை வழமைக்குத் திரும்பும் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

18 7
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கும் அமைச்சர் பதவி..!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மகிந்தவின் அரசில் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும்...