அரசியல்
மீண்டும் அம்பலமாகியுள்ள எதிர்க்கட்சியின் வங்குரோத்து நிலை
மீண்டும் அம்பலமாகியுள்ள எதிர்க்கட்சியின் வங்குரோத்து நிலை
எதிர்க்கட்சியின் வங்குரோத்து நிலைமை மீண்டும் அம்பலமாகியுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் இந்த விடயம் மீண்டும் வெளிச்சமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எவ்வித தேவைப்பாடும் அடிப்படையுமின்றி நம்பிக்கையில்லா பிரேரணைகள் கொண்டு வரப்படுவதாகவும், நாட்டு மக்களுக்கு முன்வைப்பதற்கு எவ்வித திட்டங்களும் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சிகள் இவ்வாறு மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படையின்றி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதனால் பணம் விரயமாவதினைத் தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.