tamilni 629 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கால் பதிக்கும் ரஷ்ய-இந்திய நிறுவனங்கள்

Share

இலங்கையில் கால் பதிக்கும் ரஷ்ய-இந்திய நிறுவனங்கள்

ஹம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்தின் திட்டத்தை 02 வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனம் ஒன்று கூட்டாக இணைந்து இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த நிறுவனங்களின் நிர்வாகத்துடன் பல தடவைகள் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அந்த கலந்துரையாடல்கள் பலனளித்துள்ளதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திற்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மாற்றுவது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ரஷ்ய – இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் மத்தள விமான நிலையத்தின் இலாபத்தில் ஒரு பங்கை சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் வகையிலான ஒப்பந்தமொன்று எதிர்வரும் நாட்களில் கைச்சாத்திடப்படுமென ருவன்சந்திர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...