இலங்கை
அமெரிக்க சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க வேலைத்திட்டம்
அமெரிக்க சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு ஈர்க்க வேலைத்திட்டம்
இலங்கைக்கு வருகை தரும் அமெரிக்கர்களை அதிகம் ஈர்க்கும் வகையில் பாரிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க மற்றும் ஏனைய தூதரக அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக அமெரிக்காவின் முன்னணி ஒன்லைன் பயண நிறுவனமான Expedia மற்றும் Qatar Airways ஆகியவற்றின் ஆதரவைப் பெற தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இந்த திட்டம் ஜனவரி மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் நடுப்பகுதி வரை நடைபெற உள்ளது.
இந்த திட்டத்திற்கு 30,000 முதல் 50,000 டொலர் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கு Qatar Airways நிதியுதவி செய்கிறது.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, இலங்கையில் சுற்றுலா விடுதிகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூதரகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் 2023 ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 46,344 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக எண்ணிக்கையை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுவதுடன் மேலும் பல அமெரிக்க சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் வகையில் இந்த வருடம் பல வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக வொஷிங்டன் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.