இலங்கை
400 ரூபாவாக அதிகரித்த டொலரின் பெறுமதியில் மிகப்பெரிய சரிவு
400 ரூபாவாக அதிகரித்த டொலரின் பெறுமதியில் மிகப்பெரிய சரிவு
நாட்டில் 400 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி இன்று 320 ரூபாவாக குறைவடைந்துள்ளது. டொலர் கையிருப்பும் அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்மககே தெரிவித்துள்ளார்.
நாட்டின் சமகால பொருளாதார நிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்கள் மூலம் நமது பொருளாதார நிலையை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது பொருளாதார நெருக்கடிக்காக எடுக்கப்பட்ட முடிவு ஆகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் விரைவாக மீண்டெழுந்த நாடு இலங்கை என்பதை அவர்களே தெளிவாகக் கூறியுள்ளனர். அந்த வகையில் இலங்கைக்கு தமது பாராட்டுக்களை சர்வதேச நாணய நிதியத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் 70 வீதமாக இருந்த பணவீக்கம் இன்று 5 வீதமாகக் குறைந்துள்ளது. நானூறு என்று இருந்த டொலர் இன்று சுமார் 320 ஆகக் குறைந்துள்ளது.
டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளது. எரிபொருள் உள்ளது, எரிவாயு உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.