tamilni 437 scaled
இலங்கைசெய்திகள்

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் நடைமுறைக்கு

Share

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் நடைமுறைக்கு

அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் அடுத்த வாரம் தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்பின் கடந்த 24ஆம் திகதி நடந்த வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனர்.

அத்துடன் சுமார் 62 எம்.பி.க்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலமானது 46 வாக்குகள் பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலமானது, தற்போது சட்ட வரைவுத் துறைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக சபாநாயகரின் அனுமதிக் கையொப்பம் இன்னும் இடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

எனினும் எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமையில் குறித்த சட்டமூலமானது சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை நடைமுறைப்படுத்த அங்கீகாரம் வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...

Shooting 4
இலங்கை

பெல்லன்விலவில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோகம்.

பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த, துப்பாக்கிச் சூட்டில்...

Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...