இலங்கை
ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரண தண்டனை
ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரண தண்டனை
12 வருடங்களுக்கு முன் மீன்பிடி படகை கடத்தி மூன்று கடற்றொழிலாளர்களை கொன்ற வழக்கில் 7 கடற்றொழிலாளர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (24.12.2024) ஆதித்ய படபாண்டிகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த (15.10.2012) அன்று இலங்கைக் கடற்பகுதியில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற படகை கடத்தி மூன்று கடற்றொழிலாளர்கள் மற்றும் பல கடற்றொழிலாளர்களை குறித்த 7 கடற்றொழிலாளர்கள் கடுமையாகக் காயப்படுத்தியுள்ளனர்.
மேலும் படகை கடத்தி அவுஸ்திரேலியா அனுப்பிவைத்துள்ளனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 11 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அவர்களில் மூவர் வழக்கு விசாரணையின் போது இறந்ததால், குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்பட்டன.
இந்த வழக்கில் 10வது குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த சந்தேகநபரை விடுதலை செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட நிலையில் மீதமிருந்த ஏழு குற்றவாளிகளும் இந்த தண்டனையை விதித்துள்ளார்.