பிரித்தானியாவுக்கு பயணித்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பெண்ணொருவருக்கு இருமுறை ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் விமானம் இத்தாலியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
Tunis பகுதியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானத்தில் பயணித்த பயணியொருவர் மாரடைப்பால் அவதிப்பட்டுள்ளார்.
இதன்போது விமான ஊழியர்களும் வைத்தியர் ஒருவரும் மாரடைப்பால் அவதியுற்ற பயணிக்கு CPR அளிக்க முன்வந்துள்ளனர்.
இதனையடுத்து புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே விமானத்தை அவசரமாக தரையிறக்கும் கட்டாயத்திற்கு விமானி தள்ளப்பட்டதை தொடர்ந்து அவசர நிலை அறிவிக்கப்பட்டு, இத்தாலியின் ஓல்பியா விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
லிபியா நாட்டவரான பெண் தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக் குழுவினரால் அந்த பயணி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன் உரிய நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டதை அடுத்து குறித்த பெண் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் மேலதிக வைத்திய சிகிச்சை பெறும் பொருட்டு அந்த பெண் இத்தாலியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அவருடன் அவர் மகனும் உடனிருந்தார் என்று கூறப்படுகிறது.