tamilni 507 scaled
இலங்கைசெய்திகள்

ஜனவரி முதலாம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை

Share

அரசியலமைப்பின் பிரகாரம், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று முதல் தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் அடிப்படையில் ஒக்டோபர் 16 ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான பிரதான பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு தற்போது, முன்னாயத்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் ஜனவரி முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஊடகங்கள் ஊடான விளம்பரங்கள் இன்று முதல் வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். ஆண்டு தோறும் தேருநர் இடாப்பு மீளாய்வுப் பணிகள் பெப்வரி முதலாம் திகதியிலிருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது.

எனினும், இந்த ஆண்டு தேர்தல் காலமாக இருப்பதனால் ஆணைக்குழுவானது அப்பணியை முற்கூட்டியே ஆரம்பித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...