2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா

24 66a4273c53755

2024 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா

33ஆவது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்குபற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என்று கூறி ஒரு தரப்பினர் அந்நாட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்கள் தொடருந்துகள், பேருந்துகள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் நகருக்கு செல்ல முடியாமல் அவதியுற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்பின்னர், பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததும், ஏராளமான மக்கள் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நடைபெறும் சீன் நதிக்கரையில் குவிய ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், பாரிஸ் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் 45 ஆயிரம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றியுள்ளனர். இதில் முதல் நாடாக க்ரீஸ் இடம்பெற்றுள்ளது.

இந்த அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றுள்ளனர்.

அணிவகுப்பைத் தொடர்ந்து தொடக்க விழா நிறைவு நிகழ்ச்சிகள் டொரக்கடேரோ என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரபல அமெரிக்க பாப் பாடகி லேடி காகா மேடையில் தோன்றி பாடல் பாடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகளுடன் கூடிய கண்கவர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

Exit mobile version