24 6653f2a771813
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உயிரிழந்த பிரான்ஸ் தூதுவர்: இறுதி முடிவு

Share

இலங்கையில் உயிரிழந்த பிரான்ஸ் தூதுவர்: இறுதி முடிவு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் இலங்கையில் நடைபெறுமா இல்லாவிட்டால் சடலம் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுமா என்பது குறித்து இன்று (27) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் ( Jean Francois Pactet) நேற்று (26) பிற்பகல் இராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வெலிக்கடை காவல்துறை அதிகாரிகள் குழுவினால் சடலமாக மீட்கப்பட்டார்.

அதன்படி, திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 1970 இல் பிறந்த Jean Francois Pactet, ஒக்டோபர் 2022 முதல் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...