இலங்கை
இலங்கை கிரிக்கெட் சபையின் பிரச்சினைகள்!


இலங்கை கிரிக்கெட் சபையின் பிரச்சினைகள்!
இலங்கை கிரிக்கெட், ஜே.வி.பி.க்கு நிதியளித்தது என்ற சந்தேகம் மேலும் நிரூபணமாகியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், விளையாட்டுத்துறை அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியும் அவரது பணியாளர்களும் எதிரானவர்கள் என மாறுபட்ட கருத்தை உருவாக்க முற்படுவதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டு சட்டத்தில் திருத்தம் செய்யாமல் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரச்சினைகள் குறித்து பேசுவது அர்த்தமற்றது என்பதை ஜனாதிபதியின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.