களுத்துறையில் விபத்து: 13 பேர் வைத்தியசாலையில்
களுத்துறை – நாகொட பகுதியில் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாபலகம பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த அரச பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
ஒரே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வலது பக்கம் நோக்கி திரும்ப முற்பட்டதில் பேருந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
Comments are closed.