இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 26 பெண்கள்

Share
tamilni 110 scaled
Share

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 26 பெண்கள்

குவைத்தில் இருந்து இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த பணியாளர்களே இவ்வாறு நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் நாடு கடத்தப்பட்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்துள்ள 2000க்கும் மேற்பட்ட வீட்டுப் பணியாளர்களில் இந்தக் குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

எஞ்சிய குழுவினரும் பகுதிகளாக இலங்கைக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரக அதிகாரிகள் குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இந்த வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகளை மீளப் பெறவும், அவர்கள் செலுத்த வேண்டிய அபராத தொகையை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், விமானப் பயணச்சீட்டு இல்லாத இலங்கை வீட்டுப் பணியாளர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு விமான டிக்கெட்டுகளை வழங்க குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...