காரும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து
களுத்துறையில் லொறியொன்றும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை – மொரகஹஹேன, ஹொரகஸ் சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்தவர் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த அதிகாரி கல்பத்த பயகம பகுதியைச் சேர்ந்த சந்துன் ஜயசிங்க என்ற 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நிறுவன ரீதியான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திருப்பியபோதே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.