rtjy 82 scaled
இலங்கைசெய்திகள்

சுமந்திரனை பாதுகாத்த பயங்கரவாத தடைச் சட்டம்

Share

சுமந்திரனை பாதுகாத்த பயங்கரவாத தடைச் சட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை வேவு பார்த்ததாகவும் அவருக்கெதிரான சதித்திட்டங்களை வகுத்ததாகவும் தெரிவித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (06.120.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாத தடைச் சட்டத்தை சில தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கு வேண்டிய நேரத்தில் சாதகமாக பயன்படுத்துவதுடன் தமக்கு சாதகமற்ற காலங்களில் அதற்கு எதிராக பொது வெளியில் கூச்சலிடுவதும் ஏன் என்று புரியவில்லை.

நல்லாட்சி அரசின் காலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு வழிவகை செய்து கொடுத்தவர்களும் அதில் பங்கெடுத்தவர்களும் தற்போது மௌனமாகவே காணப்படுகின்றனர்.

ஆகவே காலத்துக்கு காலம் ஏதோ ஒரு பிரச்சினை உருவாகத்தான் போகின்றது என்பதே யதார்த்தமாகும்.

அதேபோல சமூகவலைத் தளங்களை கட்டுப்படுத்தல், இனவாதக் கருத்துக்களை பரவவிட்டு இன முறுகல் நிலைகளை உருவாக்கி நாட்டில் ஏற்பட்டுவரும் இன நல்லிணக்கத்தையும் பொருளாதார இடரிலிருந்து நாடு மீள்வதையும் சீரழிப்பதற்கு வழிவகை செய்வதாகவே அமைகின்றது.

ஆவே பெருந்தேசியவாதமும், குறுந்தேசியவாதமும் இவற்றை ஊதிப் பெரிதாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமது அரசியல் நகர்வுகளை செய்தகொண்டுதான் இருப்பார்கள்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தமிழ் தரப்பினருக்கிடையே இருக்கின்ற ஒன்றுமையீனத்தை கழைத்து அனைத்த தரப்பினரும் ஒரு நிலைப்பாட்டுடன் அரசியல் தீர்வுக்கான வழியை தேடுவதே சிறந்தது என்பது எமது கட்சியின் நிலைப்பாடாக இருக்கின்றது.

இதை இந்தியாவும் எதிர்பார்க்கின்றது. அதேபோல மேற்குலகமும் இதையே தமிழ் தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...