இலங்கை

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் சிக்கல்

Published

on

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பில் சிக்கல்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 330 மில்லியன் டொலர் பிணை எடுப்பு கடன் பீய்ஜிங்கின் மறுசீரமைப்பு மறுப்பு காரணமாக நிச்சயமற்றதாகியுள்ளது.

புதுடெல்லியில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய இருதரப்பு கடன் வழங்குனர்களான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவிடமிருந்து, சாத்தியமான நிதியுதவிக்கு முன்னர், அந்த நாடுகள் தங்கள் கடன்களை மறுசீரமைப்பதாக உறுதியளிக்க வேண்டியதன் அவசியத்தை சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் இருந்தபோதிலும், பீய்ஜிங் கடன் நிவாரண கட்டமைப்பை வழங்கவில்லை என அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த மறுப்பு இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்தநிலையில் மொராக்கோவில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாதம் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இலங்கை கடன் குறைப்பு உடன்படிக்கையை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சீனா இந்த குழுவில் இன்னும் சேரவில்லை. ஒரு பார்வையாளராக இருந்து வருகிறது.

Exit mobile version