தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தனது பதவியை விட்டும், அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, நீதிபதி சரவணாராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வகையில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இது அண்மையில் குருந்தூர் மலையில் எடுக்கப்பட்ட காணொளியாக இருக்கலாம்.
குறித்த காணொளியில் நீதிபதியுடன் சரத் வீரசேகர வாக்குவாதத்தில் ஈடுபடுவது போலவும், நீதிபதி கோரிக்கை ஒன்றை மறுப்பது போலவும் காணப்படுகின்றது.