rtjy 242 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் நிபா வைரஸ்!! எச்சரிக்கை

Share

இலங்கைக்குள் நிபா வைரஸ்!! எச்சரிக்கை

பல நாடுகளில் பரவி வரும் நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என பொதுப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த வைரஸ் தெரிந்தோ தெரியாமல் நாட்டுக்குள் தற்போது நுழைந்திருக்கலாம் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு துறைமுகத்தில் அல்லது விமான நிலையத்தில் எந்த வகையிலும் பாதுகாப்பு நடைவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் பாரிய அளவிலான மக்கள் நாட்டிற்குள் வந்திருக்கலாம்.

கடற் பிரஜைகளுடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்கின்றார்கள், பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்கின்றார்கள், போதை பொருள் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இதுவரையில் நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழைந்திருக்கலாம், நுழையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதனால் வைரஸ் நாட்டில் இல்லை என யாரும் நினைக்க வேண்டாம். ஏற்கனவே பரவியிருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு பரிசோதனை முறையை வலுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பொது பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...