இலங்கை
தென்னிலங்கையில் இளம் தம்பதி கைது
தென்னிலங்கையில் இளம் தம்பதி கைது
ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கியால் சுட்டு பலத்த காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், கூரிய ஆயுதத்தால் வெட்டிய குற்றத்திற்காகவும் தேடப்பட்டு வந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபரும் கொலைக்கு உதவிய சந்தேக நபரின் மனைவியும் தங்காலை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடிகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 11 ஆம் திகதி, ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட காரில் பயணித்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதுடையவர் எனவும் அவரது மனைவி 23 வயதுடையவர் எனவும் அவர்கள் வாடிகல, ரன்ன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ஹம்பாந்தோட்டை மற்றும் ஹங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 03 மாடு திருட்டு குற்றங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபருக்கு ஹம்பாந்தோட்டை மற்றும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தினால் 06 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.