இலங்கை
கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!!
கருணாவின் பின் பிள்ளையான் அரங்கேற்றிய கொலைகள்!!
TMVP என்று அழைக்கப்படும் பிள்ளையான் குழு மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற படுகொலைப் பட்டியலை வெளியிட்டுள்ளார் பிள்ளையானின் வலதுகரமாகச் செயற்பட்ட அவரது முக்கிய சகாவான அசாத் மௌலானா.
தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் புத்திஜீவிகள் என்று பலரை பிள்ளையான் குழு படுகொலை செய்ததாக சாட்சி பகர்கின்றார் பிள்ளையானின் முன்னாள் ஊடகப்பேச்சாளரும், நெருங்கிய நண்பனுமான அசாத் மௌலானா.
IBC தமிழின் சிறப்புச் செய்தியாளருக்கு அவர் வழங்கிய செவ்வியில், இலங்கை புலனாய்வுப் பிரிவின் ஒரு கூலிப்படையாகச் செயற்பட்ட பிள்ளையான் எப்படியான சதிச்செயல்களில் ஈடுபட்டார் என்றும், எந்தெந்தப் படுகொலைகளையெல்லாம் மேற்கொண்டார் என்றும் அவர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.