இலங்கை
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.
அதன்படி லபுகமவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 106.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, தென் மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கிங் கங்கை மற்றும் நில்வல கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வல ஆறு நிரம்பி வழிவதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்திலும் அடை மழை காரணமாக ஜிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.